சனி, மே 18, 2013

கண்ணாடி மாளிகை
மே -1998

வாழைத்தண்டு பாதம் கொண்டு
தழையத்தழைய நடந்து வந்தால்
உன் சிறு பாதம் வலிக்குமென்று
கவின்மிகு மயிலறகால் தரை அமைத்து ...

உன் கூந்தலை வாரி  அணைத்து
அழகுபடுத்திக்கொள்ளும் போது
கூந்தல் சுவற்றில் பட்டு அழாமலிருக்க
கருமேகம் கொண்டு சுவரெழுப்பி ...

சூரியன் வருவதற்கு முன்னே
உன் கண்ணொளி பட
விண்ணைக்கொண்டு சன்னலமைத்து ...

நம் காதல் சின்னத்தை தேவரனைவரும்
வியந்து போற்ற கன்னாடிக்கூரை வேய்ந்து ...

உன் பஞ்சு இதழால் கதவிற்கு முத்தமிட்டு
முதன்முதலாய் கிரகப்பிரவேசம் செய்து வைத்து...

உன் மூச்சுக்காற்று பட்டால் என்
மனக்கண்ணாடி (மாளிகை) திறக்கும்
நான் உயிர் வாழ! 


கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்