தேடித்தேடி...! (04NOV1998)
வெய்யிலுக்கு நிழலைத்தேடுவது இயல்பு - நானோ
அந்த வெய்யிலைத்தேடி!
மழைக்கு குடை தேடுவது இயல்பு - நானோ
மழையைத்தேடி!
பூவின் வாசமறிந்து வண்டு வருவது இயல்பு - நானோ
பூவைத்தேடி !
தேகத்தின் தாகமறிந்து உணவு கொடுப்பது இயல்பு - நானோ
தேகத்தைத்தேடி!
சோக மறிந்து வேகமாய் ஆறுதல் சொல்வது இயல்பு - நானோ
சோகத்தைத் தேடி !
மேக ஊர்வலம் பார்த்து தோகை மயில் ஆடுவது இயல்பு - நானோ
மேகத்தைத்தேடி!
காதலியும் காதலனும் உயிராய் நேசிப்பது இயல்பு - நானோ
உயிரைத்தேடி !
தேடித்தேடி ஓரிடத்தில் நிம்மதியாய் அமர்வது இயல்பு - நானோ
அந்த இடத்தைதேடி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக