இன்னும் என்னிடம் எதிர்பர்க்கிரர்கள் -ஒரு
அமுதசுரபியை போல! என்னை விட்டு விடுங்கள்!
இந்த மண்ணும் மண்வாசனையும் பிடித்திருக்கிறது
கண்ணனுக்கு வெண்ணை பிடித்ததைபோல!
எனக்கு பிடிப்பதெல்லாம் உங்களுக்கு பிடிக்க
வேண்டும் என்று நான் எப்போதும் சொன்னதில்லை!
ஆனால் உங்களுக்கு பிடிப்பதெல்லாம் எனக்கு
பிடித்தே ஆகவேண்டும் என்று சொல்வது - நீங்கள்
என்னை விட அதிகமாய் அடம்பிடிக்கிறீர்கள்!
நீங்கள் சொல்வதை எப்படி நான் கேட்க முடியும் - என்
எந்த கேள்விக்கும் உங்களால் எனக்கு புரிவதைபோல
பதில் சொல்ல முடியவில்லை!
எப்போதும் என்னை கவனித்துக்கொண்டே இருக்கிறீர்கள்!
அதனால் நான் நானாக இருக்க முடிவதில்லை!
பூவை முகர்ந்து கொண்டே இருந்தால் வாடி விடாதா?
உங்கள் கருத்துகளை எல்லாம் என்னிடம் கொட்டாதீர்கள்!
நான் குப்பைத்தொட்டி அல்ல!
நான் ஓடுகின்ற ஆறு! - என்னை குளம்
ஆக்காதீர்கள்!
என்னை தயவு செய்து கை நீட்டி அடிக்காதீர்கள்! - நான்
அடுத்தவர்களை அடிக்க கற்றுகொன்டதே உங்களிடம்தான்!
உங்கள் கோபங்களை எல்லாம் என்னிடம் வீச வேண்டாம் - சூடான
காற்று பட்டால் பிஞ்சு செடி கருகி விடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக