வெள்ளி, ஜூன் 24, 2011

நண்பர்கள் அமைவதெல்லாம்...!




என் வாழக்கையின் மிக முக்கியமான தருணங்களில்  ஒன்று என் கல்லூரி வாழ்க்கை. நண்பர்களே இல்லாத எனக்கும் கூட நண்பர்களைசேர்த்துக்கொடுத்த ஒரு உன்னதமான காலகட்டம் அது!
1998 இல் ஒரு நாள்...கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை அன்பாக ராக்கிங் 
செய்த காலம்...அதில் ஒருவன் ஜனா. முகத்தில் கண்ணாடியும் எந்தக்கேள்விக்கும் பயப்படாத கண்களுமாய் 
எங்கள் அறையில் அவன் நிற்கவைக்கப்பட்டான். எங்கள் அறைத்தோழர்கள் கேட்ட எல்லா விதமான கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்த அவன் 
ஒரு கட்டத்தில் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தான்...அன்று ஆரம்பித்த ஒரு நெருக்கம் 
இன்று வரை தொடர்கிறது...!

அது என்ன என்று தெரியவில்லை...அவனுடன் பழகிய நாட்கள், பேசிய நாட்கள் , வாக்கு வாதம் நிகழ்த்திய நாட்கள், இவை எல்லாம் சேர்ந்து அவனை நண்பன் என்கிற தளத்தில் இருந்து கொஞ்சம் உயர்த்தவே செய்தன.
இந்தப்புகைப்படத்தில் இருப்பது போலத்தான் அவன் செய்கைகளும். நம்முடன் இருந்தாலும் அவன் செய்யும் காரியங்கள் எல்லாம் தனித்துத்தெரியும் அல்லது அப்படித்தெரிய வேண்டும் என்பதற்காகவும் இருக்கக்கூடும். ஆனால் அதை சுட்டிக்காட்டினாலும் அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். அந்த குணமே மேலும் எங்கள் நட்பை பலப்படுத்தியது.  நண்பன் என்று நான் சொன்னாலும் அவன் இதையே வேறு மாதிரி சொல்வான். அதுவும் கூட்டிக்கழித்துபார்த்தால் நண்பன் என்றுதான் முடியும். ஆனாலும் அவன் அதற்கு வேறு வார்த்தை சொல்லக்கூடும்..இப்போதும் அவன் அப்படியே!

அவனுடன் எதைப்பற்றியும் பேசலாம்.மணிக்கணக்காக பேசுவான். எதிலும் மாறுபட்ட சிந்தனை உடையவன்.  அவனிடம் நான் கற்றுக்கொண்டது நிறைய.  சொல்லப்போனால் அவன் மூலமாகத்தான் நான் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். என் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அவன் தான் முதல் விமர்சனம் வைப்பான். அந்த விமர்சனத்திற்காகவே இன்னும் நிறைய எழுதலாம் அல்லது நன்றாக  எழுத் வேண்டும்  என்று தோன்றும்.

இன்று எனக்கு ஓரளவுக்கு எழுதத்தெரிகிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம்  அவன்தான்! 

(இன்னும் தொடரும்!)
     

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்