சனி, மே 07, 2011

இலக்கிய விருது...விழா..சர்ச்சை!

இப்போதுதான் தெரிகிறது எனக்கு, ஏன் இலக்கிய கூட்டங்களுக்கோ அல்லது இலக்கியம் படிப்பதற்கோ இளைஞர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று! அதுவும் என்னைப்போன்ற மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களை கொஞ்சம் இலக்கியம் பக்கம் திரும்பிப்பார்க்கும் சிலரின் முயற்சியும் சில பேரின் செயல்களால் வருத்தமும் அயர்ச்சியும் ஏற்படும்  என்பதில் சந்தேகமே இல்லை. 

இருந்தாலும் சிலர் மெனக்கெட்டு தன் ஆர்வத்தால் தூண்டப்பட்டு விழாவுக்கு வந்தால்...விருது கொடுப்பவர்களுக்கு அறிவில்லை, விருது கமிட்டியில் யாரும் படித்தவர்கள் இல்லை, அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே  விருதுகள் வழங்கப்படுகின்றன , ...அப்பாடா...இவர்களால் ஒரு நயாபைசா கொடுக்க முடியவில்லைஎன்றாலும் குற்ற்சாட்டுகளுக்குக்குறைவில்லை!


எந்த இலக்கிய கூட்டமும் இலக்கிய விருது விழாவும் சர்ச்சை இல்லாமல் சண்டை இல்லாமல் முடிந்தது இல்லை. 
இதில் என்ன வேடிக்கை என்றால் சர்ச்சை பண்ணுகிறவர்கள் வெறும் சாதாரண ஆட்கள். சிறு புகழுள்ளவர்கள் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். 

இவர்களால் பெரிய அளவில் தமிழுக்கோ அல்லது தமிழ் சமுதாயத்திற்கோ பயன் ஒன்றும் இல்லை என்றாலும் கூட இவர்கள் எழுப்பும் வாதம் ஏதோ மிகப்பெரிய அளவில் எல்லோரும் தவறு செய்து விட்டார்கள் அல்லது கொள்ளை அடித்துவிட்டார்கள் என்பது போலவே இருக்கும்.

தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி என்னவெல்லாம் தமிழ் சமூகத்திற்கு சொல்லலாம் எதை எல்லாம் இங்கிருந்து வேற்று நாட்டினருக்கு எடுத்து செல்லலாம் என்பதை விடுத்து, தன் தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரை ஏய்த்து பேசுவதும் அவருக்கு என்ன தெரியும் செல்லாக்காசு என்பது போலவும் தன் பெருமை மட்டுமே இவர்களும் இந்த உலகமும் பேசவேண்டும் என்று கூப்பாடு போடுவதும் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. 

இப்படிப்பட்ட ஆட்களால் என்ன நன்மை இந்த உலகத்திற்கு ஏற்படும்? இதற்கெல்லாம் கூச்சல் போடும் இவர்களின் எழுத்துக்கள் அல்லது பேச்சுக்கள் எந்த அளவு நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருக்கும் அல்லது உண்மை பேசுபவையாக இருக்கும்? தன் அளவில் உண்மை இல்லாதவர்களின் எழுத்தோ செயலோ பேச்சோ எப்படி காலம் கடந்து நிற்கும்? 

ஆனால் இப்படி கூச்சல் எழுப்பும் எல்லாரின் எழுத்துகளையும் இவர்கள் குற்றஞ்சாட்டும் நபரின் பதிப்பகத்தில் இருந்தே அச்சாகின்றன என்பது வேறு விஷயம்!

ஆக இலக்கிய உலகில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் இப்படிப்பட்ட ஸ்டன்ட் தேவைப்படுகிறது போலும்! தன்னாலும் இலக்கிய நயத்தோடு குறை சொல்ல முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இப்படிப்பட்ட மலிவான விளம்பரங்கள் வேண்டும் போல!

இது தெருச்சண்டையை விட அசிங்கமாக இருக்கிறது. 
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால்  இந்தக்குற்றச் சாட்டுக்கெல்லாம் தமிழின் மாபெரும் கவிஞன் தன் நேரத்தை செலவழித்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தான் நம் தமிழ் இலக்கிய சூழல் உள்ளது! அதற்காக நாம் வெட்கித்தலை குனிய வேண்டும். 

முகப்புத்தகத்தில் ஒருவர் எழுதி இருந்தார்.
"மனுஸூம் அவரது நிலையவித்வான்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருது கொடுத்து விளையாட ஒவ்வொரு ஆண்டும் ஏன் சுஜாதாவை சாகடிக்கிறார்கள்?!" என்று.

 நான் அதற்கு எழுதி இருந்தேன். அவரால் முடிந்ததை அவர் செய்கிறார். உங்களால் முடிந்தால் நீங்கள் கூட விருது கொடுக்கலாம் என்றேன். அதற்கு ஒரு அறிவாளி இப்படி பின்னூட்டம் எழுதி இருந்தார். 

"ஒரு லோன் போடு, மனுசுக்கு 30 அடிக்கு கட் அவுட் வை. மூணு போஸ்ட்ல ஒன்னு மனுஸ் புகழ்பாடுவதாக உன் ப்ளாகில் எழுதித் தள்ளு நைனா. அடுத்த விருத உனக்கே குடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை." 

என்ன ஒரு மரியாதை பாருங்கள். இந்தப்பின்னூட்டம் இருக்கிறதே ...அப்பப்பா ...சாகடிக்கிறார்கள் இந்த அறிவு ஜீவிகள்!

ஏன் இத்தனை கோபம் விருது கொடுப்பவர்கள் மீது? எனக்கு இந்த இலக்கிய விளையாட்டு கொஞ்சம் கூட விளங்கவே இல்லை. 

தங்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை என்ற கோபமா? 
இல்லை இவர்கள் அந்த விழாவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டு அவர்களை மதிக்காமல் நடந்து கொண்டார்களா?
இல்லை தமிழ் உலகம் இவர்களுக்கு மட்டும்தான் விருது கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? 

பின் எதற்காக இந்த குழாயடிச்சண்டை?  இப்படி இந்த விருதை பெருமையாக நினைக்கும் இவர்கள் அந்த விருதுக்காக என்ன செய்தார்கள்? 

இத்தனைக்கும் இதன் எல்லா விதி முறைகளையும் முன்னரே அறிவித்திருந்தும் இப்படி முணுமுணுக்க என்ன காரணம் இருக்க முடியும்? 

ஒரே காரணந்தான்! தன்னை மட்டுமே முன்னிறுத்தி பார்க்கும் இந்த குணம்! இத்தனைக்கும் இவ்வளவு பேசுபவர்கள் எல்லாம் அங்கிருந்து வந்தவர்களே...அவர்களால் பயன் அடைந்தவர்களே! 

அது போகட்டும்... இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்! 
மனுஷ்...
     இந்த மாதிரி துண்டு துக்கடா எதிர்வினைகளுக்கெல்லாம் நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் போக வேண்டிய தூரம் தொட வேண்டிய தூரம்  எவ்வளவோ இருக்கிறது.  இப்போதே உங்கள் உயரத்தை தொட இங்கே ஆள் இல்லை.

எல்லாவற்றிகும் அமைதியாக இருப்பதே  மிகப்பெரிய தண்டனை என்று நான் நினைக்கிறேன். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து ..நீங்கள் சொல்லியது போலவே பின்னூட்டம் என்ற பெயரில் தகாத வார்த்தைகள் வசைகள் வாங்கி...! போதும்! என்ன சொன்னாலும் இவர்கள் நம்பப்போவதில்லை. யாரும்! நம்பி ஆகப்போவது ஒன்றுமில்லை! 






 

4 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள், மனுஷ உம், சாரு வும், மற்ற வருங்கால எழுத்தாளர்களும் இதில் தங்கள் நேரத்தை வீண் அடிக்கக் கூடாது.
பல பின்னூட்டங்களை தணிக்கை செய்து விட்டார்கள்.

எம்ஜி ஆர் பெயரை, படத்தை, பாடலைப் பயன்படுத்தி சிறிய கட்சிகள் எல்லாம் வாக்குக் கேட்பது போன்று உள்ளது இவர்கள் நிலை.
சுஜாதா பெயரை, படத்தைப் பயன்படுத்தி தங்களின் புத்தகங்களை விற்கலாம் என திட்டம் போடுகின்றனர்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள், மனுஷ உம், சாரு வும், மற்ற வருங்கால எழுத்தாளர்களும் இதில் தங்கள் நேரத்தை வீண் அடிக்கக் கூடாது.
பல பின்னூட்டங்களை தணிக்கை செய்து விட்டார்கள்.

எம்ஜி ஆர் பெயரை, படத்தை, பாடலைப் பயன்படுத்தி சிறிய கட்சிகள் எல்லாம் வாக்குக் கேட்பது போன்று உள்ளது இவர்கள் நிலை.
சுஜாதா பெயரை, படத்தைப் பயன்படுத்தி தங்களின் புத்தகங்களை விற்கலாம் என திட்டம் போடுகின்றனர்.

babaji சொன்னது…

சுஜாதா தமிழில் மறக்க மறுக்க முடியா ஆளுமை . மனதில் பட்டதை நியாமாகவும் , ஆழ் மன இச்சைகளை அப்பட்டமாகவும் எடுத்துரைத்த ஒரு உன்னத படைப்பாளி சுஜாதா .ஆனால் அவரை ஒரு சராசரி எழுத்தாளராய் அடையாளம் காட்ட முயற்சிப்பது மிகவும் கொடுமை. காரணம் சமகால தமிழ் சமுதாயத்தில் இலக்கிய தேடல் மிகவும் குறைவு. சுஜாதாவை படித்த எவரும் ஐசக் அசிமோவை படித்திருக்க மாட்டார்கள். இங்கு புத்தகம் எனில் அது விகடன், குமுதம் தான். இந்த நிலையுலும், புது திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் உயிர்மையால் வழங்கப்படும் சுஜாதா விருதுகள் நிச்சயம் பாராட்டுக்குரிய ஒன்று.

செல்வகுமார் சொன்னது…

உங்கள் பதிவு சரிதான். விருதும், விருது வழங்கும் விழாவும் வேறு வேறு. விழா என்பது கொண்டாட்டம். மனுஷ எழுதிய பதிலும் நன்று. மேலும், இது போன்ற கருத்துக்களை பதில் சொல்லாமல் விட்டால், இந்த பதிவின் வழியாக விருதை பற்றி அறிபவர்கள், ஒரு தவறான வழிகாட்டுதல் மூலம், விருதுகளை மதிப்பிட முயலலாம். பதில் சொல்லபடுவதும் அவசியமே.

வலைப்பதிவு காப்பகம்