திங்கள், மே 09, 2011

பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்

பக்கத்தில் அமர்ந்திருக்கும் 
பெண்ணைவிட  
எதிரில் அமர்ந்திருக்கும்
பெண்
அதிகம் ஈர்க்கிறாள்!
           
                 எதிரில் அமர்ந்திருக்கும்
                பெண் என்பது நம் பார்வை
                 படும் தூரம் வரை!
               
                  எதிரில் அமர்ந்திருக்கும்
                  பெண்ணை எந்த மன உறுத்தலும்
                  இல்லாமல் பார்க்கலாம்

                   எதிரில் அமர்ந்திருக்கும்
                   பெண்ணின் முகத்தை
                   கூச்சம் இல்லாமல்
                   நேருக்கு நேர் பார்க்கலாம் 
                   எங்கோ பார்ப்பது போல் 
                   அங்குலம் அங்குலமாய் ரசிக்கலாம் 

                   எதிரில் இருக்கும் பெண்
                   திரைப்படமோ அல்லது தொலைக்காட்சி
                   பார்ப்பது போலவோ
                   அவ்வளவு சுவாரசியமானவள்

                   அதனால்தான் நடிகைகளை
                   அவ்வளவு கொண்டாடுகிறோம்

                   எதிரில் அமர்ந்திருக்கும் 
                   பெண்ணின் முழு உருவத்தையும் 
                   சில நேரங்களில் தலை முதல் கால் வரை 
                   அவள் என்னென்ன செய்கிறாள் 
                    எந்தப்பாடலை அவள் முணுமுணுக்கிறாள் 
                    எப்போது தலையைக் கோதிக் கொள்கிறாள்
                    எப்போது அதைக்காற்றில் பறக்கவிடுகிறாள்
                    எப்போது எந்த சாக்லேட்டை எடுக்கிறாள் 
                    எப்போது குறுஞ்செய்தி   அனுப்புகிறாள்
                    தனக்கு வரும் குறுஞ்செய்தி களுக்கு 
                    எப்படி தன வாயோடு சிரித்துக்கொள்கிறாள்   
                    என்பது வரை நேரம் போவதே தெரியாமல் 
                   அவளின் நினைவாகவே   இருக்க வைக்க 
                    அவளால் மட்டுமே முடியும்    

பக்கத்தில் அமர்ந்திருக்கும்  
பெண்ணை நாம்
ஓரக்கண்ணால் மட்டுமே பார்க்கமுடியும்
அதில் நம் கவுரவம் அடங்கி
இருப்பதால் அப்படிசெய்வதில்
நம்மில் பலருக்கு உடன்பாடில்லை

அவள் அழகாகவே இருந்தாலும்
நாம் பெரிதாய் முக்கியத்துவம்
கொடுத்து எப்படியாவது
பார்த்துவிடலாம் என்று துடிப்பதில்லை
உன்னிடத்தில் நான் எத்தனை கண்ணியமாய்
நடந்து கொள்கிறேன் என்று
சொல்வதைப்போன்றது அது



பக்கத்தில் அமர்ந்திருக்கும்
பெண் நமக்கு சில நாகரிகங்களை  
சொல்லாமல் சொல்லிக்கொடுக்கிறாள்
எச்சரிக்கை உணர்வோடு
நம் இருக்கையில் நாம் அமர
அடுத்தவர் மீது கைபடாமல்
கால்படாமல் இருக்க
நல்லவர்களாய் இல்லை என்றாலும்
கொஞ்ச நேரமாவது அதுபோல நடிக்க
கைப்பேசியில் பேசும்போது
யாருக்கும் கேட்காமல் அமைதியாய் பேச
நம் பலவிதமான எண்ண ஓட்டங்களை 
கொஞ்ச நேரம்  நிறுத்தி வைக்க
மனதை ஒருமுகப்படுத்த
அடுத்தவர் என்ன செய்கிறார்
என்பதை கவனிக்காமல்  இருக்க

பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்
மனைவியைப்போன்றே
தாம் அதிகம் பேசாமல்
அடுத்தவர்களை பேசவைக்கிறாள்
அவர்களைப்பற்றியே எண்ண வைக்கிறாள் 

என்னதான் எதிரில்
அமர்ந்திருக்கும் பெண்ணை  
ரசித்தாலும் நம் கவனம் முழுக்க
பக்கத்தில் இருக்கும் பெண்ணின்மீதுதான்
மனம் தானாகவே ஓடி
அவர்களிடம் ஒளிந்து கொள்கிறது

           என்னதான் எதிரில் அமர்ந்திருக்கும் பெண் 
           நம் கவனத்தை ஈர்த்தாலும் கடைசியில் 
           பக்கத்தில் அமரும் பெண்ணே
           உபயோகமாய் வாழ்க்கையைப்பற்றி   
           அதிகம் சிந்திக்க வைக்கிறாள்!                
                  
                 
             

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்