வியாழன், ஏப்ரல் 28, 2011

குழந்தைப்பெரியவர்கள்

குழந்தையை குழந்தையாய்
வளர்ப்பதில் உள்ள சிரமம்
எனக்குத்தான் தெரியும்!

இப்போதுள்ள குழந்தைகள்
குறைந்த பட்சம் ஐந்து வருடம்
முன்னால் யோசிக்கின்றன

ஆரம்பத்தில் அவர்களுக்கான பொருட்களை
நாம்  தேர்ந்தெடுக்கிறோம்
வெகு சீக்கிரத்தில் தாங்களே
தங்களுக்குத்தேவையானவற்றை
தேர்ந்தெடுக்கிறார்கள்

கணினியை நாம் அறிமுகப்படுத்துகிறோம்
அதிலுள்ள பயன்பாடுகளை அவர்கள்
நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்  

குழந்தைத்தன்மை பொருந்திய
குழந்தையை குழந்தையாகவே
வளர்ப்பதில் பல சிக்கல்கள்
இருக்கவே செய்கின்றன!

எதனால் இப்படி என்று
யோசித்ததில் இதுதான் எனக்கு
பதிலாகக்கிடைத்தது...

1 . அவர்களை என் போக்குக்கு  இழுக்கிறேன்
2 . அவர்கள் சிறுவர்கள் என்பதை நான்
     எப்போதும் மறந்து போகிறேன்
3 . எப்போதும் என்னைப்பற்றியே சிந்திக்கிறேன்
4 . நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதை
     எப்படியோ மறந்து போகிறேன்
5 .  அலுவலகம் போலவே என் குழந்தையும்
      எனக்கு அடிபணிய வேண்டும் என்று நினைக்கிறேன்
6 . ஒரு மேலாளர் போலவே வீட்டிலும் நடந்து கொள்கிறேன்
     சொல்பேச்சு கேட்கவில்லைஎன்றால் குழந்தையை அடிக்கிறேன்
7 . என்னைப்போலவே பேசினால் கைத்தட்டி ரசிக்கிறேன்
8 . அதிகமாய் கேள்வி கேட்டால் கோபத்தில் கன்னம் சிவக்கிறேன்
9 . எப்போதாவது "நீ குழந்தை மாதிரியே நடந்துகொள்ளவில்லை" என
    அவர்கள் மீது   எரிந்து விழுகிறேன்
10 . நான் என்ன எல்லாம் செய்கிறேனோ அதை எல்லாம்       அவர்கள் புரிந்து   கொண்டு   செய்ய  வேண்டும் என எதிர்பார்க்கிறேன்

இப்படி எல்லாம் இல்லாத
ஒரு தகப்பனை நீங்கள்
பார்த்திருந்தால் எனக்கு தகவல்
கொடுக்கவும் - ஏனெனில்

நான் என் குழந்தையை
குழந்தையாய் வளர்க்க
ஆசைப்படுகிறேன்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்