செவ்வாய், ஏப்ரல் 26, 2011

நம்பிக்கை


நம்பிக்கைகள் எப்போதும் 
அழகான தருணங்கள் கொண்டவை...

நாம் அடுத்தவருக்கு 
ஆறுதல் சொல்லும்போதும்  
அவர்களுக்குத் தன்னம்பிக்கைக்  கதைகள்
சொல்லித் தேற்றும்போதும்

பணம் இல்லாதவர்களுக்குப்
பாடம் சொல்லும்போதும்
எப்படி உழைத்து முன்னேறுவது
என்று வகுப்பு எடுக்கும்போதும்

தம் அனுபவங்களை
கண்ணீர்மல்க பிறருக்கு
எடுத்துரைக்கும்போதும்
அதுவே கேட்பவர்களுக்கு
உந்து சக்தியாக மாறும்போதும்

கிடைத்த நேரத்தில்
ஒரு சிலருக்காவது
அறிவுரை சொல்ல நேரும்போதும்
அதையே வேதவாக்காக
அடுத்தவர் எடுத்துக்கொள்ளும்போதும்

நம்பிக்கைகள் எப்போதும்
அழகான தருணங்கள் கொண்டவை...

நம்பிக்கைகள் எப்போதும்
அழகான தருணங்கள் கொண்டவைதான்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்