வியாழன், ஏப்ரல் 14, 2011

மருத்துவமனைக்கவிதைகள் - 2


மருத்துவமனையில் உங்கள் பிள்ளையையோ 
அல்லது  உங்கள் ரத்த 
சொந்தங்களையோ  சேர்த்திருந்தால்
நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:

நீங்கள் கேட்கும் விவரங்கள் 
உங்களுக்கு அவசர தேவைகள் என்றாலும்
உடனே உங்களுக்குக்கிடைக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது...

நீங்களும் ஒரு மனிதர்தான் என்பதை 
உங்கள் மருத்துவர் மறந்து போனால் 
அதற்கு ஆச்சர்யம் காட்டாது 
அமைதியாக இருந்து விடவேண்டும்...

பல சமயங்களில் அவர் மறந்து போய்
வேறு மருந்தோ அல்லது மருந்தே கொடுக்காமல் 
போனாலும் நீங்கள் அதைப்பற்றி
எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது...

ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள்தான் 
மருத்துவர்  உங்கள் நோயாளியை
சோதனை செய்வார் என்று நீங்கள்
புலம்பக்கூடாது அதிலும் குறிப்பாக செவிலியரிடம்
அதைப்பற்றி முறையிடவே கூடாது...

நீங்கள் மருத்துவ காப்பீடு
பெற்றிருந்தால் ஒரு வாரம்
அதிகமாகவே அங்கு தங்கவேண்டி இருக்கும்
இருந்தாலும் நீங்கள் எந்தக்குறையும் 
யாரிடமும் சொல்லக்கூடாது...

நீங்கள் கேட்கும் எந்தக்கேள்விக்கும் 
அவமானங்களோ அல்லது பரிகசிப்புகளோ 
மட்டும் வந்தால் அது ஒரு மருத்துவமனைதான் 
என்று நீங்கள் பூரணமாக நம்பலாம்...

மொத்தத்தில் நீங்கள் ஒரு 
மருத்துவமனைக்கு செல்லும்போது 
நீங்கள் மனிதன் என்பதை  
மறந்து விட்டு செல்வது நல்லது!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்