செவ்வாய், ஏப்ரல் 05, 2011

நன்றிக்கடன்

 வேலை இல்லையா?
தேடு தகுதிக்கேற்ப
எதிர்பார்த்தது போல்
சீக்கிரம் கிடைக்காது
கோபம் வரும் 
கோபப்படு! 

சிபாரிசு கேட்பார்கள்
கெளரவம் பார்க்காமல் ஆள் தேடு
அவமானப்படுவாய்
அவமானப்படு!

தெரிந்தவர்களிடமெல்லாம் போ 
துரத்துவார்கள் 
வெட்கப்படுவாய் 
வெட்கப்படு!

சொந்தங்களிடம் போ 
போ நாயே" என்பார்கள் 
அடிப்பார்கள் 
குழி பறிப்பார்கள் 
வலி தாங்காமல் அழுவாய் 
தேம்பித்தேம்பி அழு!
கண்ணீர் தீரும் வரை அழு!

இதுதான் சரியான நேரம்
ஒரு பெண்ணைக்காதலி!
சிரிக்க சிரிக்கப்பேசு
அவளும் சிரிப்பாள்
அந்த நேரத்தில் 
வேலை தேடுகிறேன் என்று சொல்!
செருப்பைக்காட்டுவாள்!

கோபம் அவமானம் ஆத்திரம் வெட்கம் 
அனைத்தும் பிடுங்கித்தின்னும் 
நீ தீரும் வரை தின்னும் 
தின்னப்படு!

இப்போது     ரௌத்திரம் கொள்!
தீரா ரௌத்திரம் கொள்  

எப்போதாவது உனக்கும் 
வேலை  கிடைக்கும்
தயங்காமல் எழுது
அவமானப்படுத்தியவர்களுக்கு
தபால் அட்டையில்
ஒரே ஒரு வரி:
"நன்றி"   !

  ---------------------------21-11-2002-------காலை 9 மணி

  

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்