அந்தக்கால கோடை விடுமுறை!
ஒவ்வொரு பருவத்திற்கும்
ஒரு விளையாட்டு வைத்திருப்போம்
குளிர் காலத்தில் ஜில்லி, கோலி,ஆபியம்
ஏரி மற்றும் கிணற்றில் நீச்சல்
இரவில் தெருக்களில் சிதறிய வைக்கோல்
பொறுக்கி அதிகாலையில் குளிர் காய்வது!
வெய்யில் காலத்தில் கில்லி, நீர் வறண்ட
கிணறுகளில் ஓரி மற்றும் கோலி
மதிய வேளைகளில் பல்லாங்குழி, தாயம்
மாலை வேளைகளில் நொண்டி ஆட்டம்,
வளையல் ஆட்டம், நிலாக்கும்பல்
இரவு வேளைகளில் கும்மிப்பாட்டு
சில நேரங்களில் பாட்டிகளிடம் கதை கேட்பது
சில பகல் பொழுதுகளில் வைக்கோல்
கயிறு திரிப்பது பட்டம் விடுவது
இந்தக்கால கோடை விடுமுறை!
கணினி கற்றுகொள்ளச்செய்வது
இசை கற்றுகொள்ளச்செய்வது
நீச்சல், குளங்களில் கற்றுகொள்ளச்செய்வது
அடுத்தவருட பாடங்களை
இப்போதே படிக்கவைப்பது
இந்த நேரத்தில் இதைத்தான் செய்யவேண்டும்
என பெற்றோர்கள் கால அட்டவணை போடுவது
இவர்களின் நகலாக குழந்தைகளை ஆக்குவது
அப்போதெல்லாம் நாங்களே
விளையாட்டைத்தீர்மானிப்போம்!
இப்போது அவர்களின் பெற்றோர்கள்
தீர்மானிக்கிறார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக