ஞாயிறு, மார்ச் 06, 2011

கடலுக்குள்ளேயும் ஒரு கடல்!


 நான் பேசுவதற்கு முன்னேயே 
தெரிந்து விடுகிறது என்னைப்பற்றிய உண்மைகள் -
இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் 
பேசிக்கொண்டிருக்கிறேன்...

எல்லோருமே நம்பிவிடுகிறார்கள் - ஆனால் 
எனக்குள்ளே இருக்கும் உண்மை 
சீறிப்பாய்கிறது ...
எப்போதாவது இப்படித்தான்...
'நான் எங்கேயும் போய்விடவில்லை 
இங்கேதான் இருக்கிறேன்'
என்று என்னை எழுப்பிவிட்டுப்போகும்.
இருந்தாலும் நான் அதை கண்டுகொள்வதில்லை!

நான் கெட்டிக்காரன் என்று 
நிரூபிக்க நானே வழியைக்கண்டு பிடிக்கிறேன்
எல்லோரும் கைதட்டுகிறார்கள்.
நான் எல்லாப்பெண்களையும் 
தோழியாகவே கருதுகிறேன்' என்கிறேன் 
எல்லோரும் என்னை நம்புகிறார்கள்
காமம் என்றால் ச்சீ ..ச்சீ  என்கிறேன் 
என்னைப்பன்பாலன் என்கிறார்கள்.
கடலுக்குள்ளேயும் ஒரு கடல் இருப்பது 
பாவம் அவர்களுக்குத்தெரியாது 
எனக்குதானே தெரியும் 
எது உண்மை எது பொய்யென்று!
இருந்தாலும் தொடர்ந்து பேசுகிறேன் ...
எல்லோரும் என்னை நம்புகிறார்கள்!
 ---------------------------------------------------------
13th FEB,2003

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்