நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன் அப்போது. நானும் என் அக்காவும் சைக்கிளில் பள்ளி செல்வது வழக்கம். எங்கள் ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் இருந்தது அந்த பள்ளி. எங்கள் இருவருக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. பாதி தூரம் நான் சைக்கிள் மிதிக்க வேண்டும், மீதி தூரம் அக்கா மிதிக்க வேண்டும். அந்த பாதி தூரத்திற்கு ஒரு அடையாளம் உண்டு. அங்கே அழகான ஒரு கிணறும் ஒரு மாமரமும் சில வேப்ப மரங்களும் உண்டு. அங்கே சிறிது நிழலில் இருந்து விட்டு மீதி தூரம் கடக்க எத்தனிப்போம். இதுதான் எங்கள் தினசரி வழக்கம்.
எங்கள் வீட்டிலிருந்து எட்டு மணிக்கெல்லாம் நாங்கள் கிளம்பி விடுவோம். எட்டரைக்கு அந்த பாதி தூர அடையாள இடத்தில் இருப்போம். எப்போதும் அந்த நேரத்தில் ஒருவர் எதிர்ப்புறமிருந்து எங்களைக்கடந்து செல்வார். சில பசங்கள் நடந்து சென்று கொண்டிருப்பார்கள். சிலர் சைக்கிளில் வருவார்கள். நாங்கள் எல்லாரும் கடந்து செல்பவரை 'இப்போ மணி என்ன?'
என்று கேட்பது வழக்கம். அவரிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். "எட்டரை" என்று. நான் ஆறாவதிலிருந்து அந்தப்பள்ளிக்கூடத்தில் படித்துகொண்டிருப்பவன். நான் பள்ளியில் சேர்ந்ததில் இருந்து இந்த பதிலை கேட்டுக்கொண்டிருந்தேன். அதிலும் நான் அவரை விடுவதில்லை. அவர் எங்களைக்கடந்து செல்லும்போதெல்லாம் கட்டாயம் அவரை "இப்போ மணி என்ன" என்று கேட்க தவறியதே இல்லை . அவரும் பதில் சொல்லி அலுப்பதே இல்லை. சில சமயம் எங்களைப்பார்த்ததும் அவராகவே 'இப்போ எட்டரை மணி' என்று சொல்வதும் நடந்துதுண்டு.
அவ்வளவு நல்ல மனிதர் அவர். அவருக்கு எப்படியும் ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். என்ன வேலை செய்கிறார் என்று கூட எங்களுக்குத்தெரியாது. அவர் வேட்டியும் அந்த ஊதா நிற சட்டையும் ஒரு பெரிய மனிதர் தோற்றமும் மணி கேட்கும் பசங்களிடம் சின்ன முகசுழிப்பும் இல்லாத ஒரு மெல்லிய புன்னகையும் அவரைப்பார்த்ததும் வரும் ஒரு மரியாதையுமே அவர் எந்த வேலை செய்தால்தான் என்ன' என்ற எண்ணம் இருந்தது. இருந்தாலும் அவர் ஒரு வாத்தியாராக இருக்கக்கூடும் என்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது.
சிலசமயம் சில பசங்கள் அவரை "எட்டரை" என்று கிண்டல் அவர் போனதும் கிண்டல் செய்வார்கள். நானும் கூட கிண்டல் செய்திருக்கிறேன்.
அவர் ஏதேனும் ஒரு நாள் எங்கள் எதிரில் வரவில்லை என்றால் நான் பரபரத்ததுண்டு. இப்போது மணி என்ன என்று தெரியவில்லையே' என்று. என் பதற்றம் சில சமயம் என் அக்காவுக்கும் தொற்றிக்கொள்ளும். நாங்கள் தாமதமாகப்பள்ளிக்குச்சென்றால் வெய்யிலில் நிற்க வைத்து விடுவார்கள் பள்ளி மாணவர் தலைவரும் அவர் தலைமயில் இயங்கும் குட்டித்தலைவர்களும். அதற்கு பயந்து கொண்டே வேகமாக சைக்கிளை விரட்டுவோம்.
அன்று சனிக்கிழமை. எங்களுக்கு அரை நாள் தான் பள்ளி இருந்தது. நாங்கள் மதியம் பள்ளி விட்டதும் வீட்டுக்கு கிளம்பினோம். போகும் வழியில் அந்த பாதி தூர அடையாள இடம் வந்தது. அப்போது என் அக்கா முறை. நான் சைக்கிளை விட்டுக்கீழிறங்கி என் அக்காவிடம் கொடுத்தேன். அப்போது சரியாக அந்த "எட்டரை" வந்தார்.
அவர் தூரத்தில் வரும்போதே நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன். எனது அக்காவிடம் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் எங்களைக்கடந்து சென்றார். அப்போது மணி மதியம் ஒண்ணரை இருக்கும். பசி நேரம். எங்களுக்கும் பசி. அவருக்கும் பசி இருக்கும் என்று தான் தோன்றியது. அவர் மிக மெதுவாகத்தான் சைக்கிளை ஓட்டிச்சென்றார். அவருக்கும் இன்று அரை நாள் போலிருக்கிறது. அதிகமான வெயில் வேறு கொளுத்தியது .
அப்போது நான் சும்மா இல்லாமல் எங்களைக்கடந்து சென்றவரிடம் "இப்போ மணி எட்டரைதானே" என்றேன். என்ன நினைத்தாரோ இல்லை எந்த கோபத்தில் இருந்தாரோ(பசியின் கொடுமையாக இருக்கலாம்...பாவம்..வயதும் ஒரு காரணம் வேறு ) தெரியவில்லை. அபப்டி ஒரு கோபம் அவர் கண்ணிலும் பேச்சிலும்.
"மூஞ்சைப்பாரு குரங்கு மாதிரி. சைக்கிளை விட்டு கீழ இறங்குடா நாயே...மணி சொல்றேன்." கோபத்தில் பேசிக்கொண்டே போனார். அதற்குள் நான் என் அக்காவிடம் " சீக்கிரம் ..வேகமா ஓட்டு ..அந்த ஆள் சைக்கிளை வுட்டு கீழ இறங்கிட்டாரு...இம்...சீக்கிரம் போ..." என்று விரட்டினேன் பயத்தில். நான் பயந்துதான் போனேன். திரும்பிப்பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தோம் அந்த பயம் நீங்காமலே.
வீட்டுக்கு வந்ததும் நடந்ததை சொன்னோம். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்பாவிடம் கேட்டேன் அவரைத்தெரியுமா என்று. அவர் பக்கத்து ஊரில் ப்யூனாக இருப்பவர் என்று தெரிந்தது.
அந்த சம்பவத்திற்குப்பிறகு அவரை நான் சில முறைதான் பார்க்க நேர்ந்தது.எட்டாவது வரை அந்த ஊரில் தான் நான் படித்தேன். ஆனால் ஏனோ அவரைப்பார்க்க முடிவதில்லை. அவருக்கு நெஞ்சு வலி வந்திருப்பதாக அப்பா மூலம் அறிந்தேன். அதனால் இப்போதெல்லாம் அவர் சைக்கிள் ஓட்டுவதில்லையாம். என் மனதை என்னவோ செய்தது. இந்த நேரத்தில்தானா அவரிடம் "மூஞ்சைப்பாரு குரங்கு மாதிரி" என்று திட்டு வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்த சம்பவம் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவரும் அவர் கட்டி இருந்த வாட்சும் என் நெஞ்சில் பசுமையாய் வந்து போகும்.
இருந்தாலும் அவர் ப்யூன் என்பதை என் மனம் நம்ப மறுத்தது. அவர் வாத்தியாராகத்தான் என் மனதில் அறிமுகம் ஆனார். அப்படியே இருந்து விட்டுப்போகட்டும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக