ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

கடைசித்தூக்கம்

நீண்ட நேரம்
நான் எங்கிருக்கிறேன்
என்று தெரியவில்லை!
அது ஒரு மார்கழி மாதம் -
' வாழ்ந்தது வரைக்கும் திருப்தியா?'
என்று ஒரு பெரியவர் கேட்டார்.

என்ன கேள்வி இது?
எந்தக்'காலத்தில்' சேர்ப்பது?
புரியாமல் இங்கும் அங்கும் அலைந்தேன்.

என்ன பதில் சொல்வது?
இன்னும் கொஞ்சம்
வாழ்ந்து விட்டு வருகிறேன் என்றா?
அல்லது வாழ்ந்தது போதும் என்பதா?

இவர் ஏன் என்னைப்பார்த்து
அந்தக்கேள்வி கேட்கவேண்டும்?
அவரிடம் கேட்கவேண்டும் போலிருந்தது
ஆனாலும் பயம் வந்தது.

எந்த வயதில் கேட்டாலும்
இந்தக்கேள்விக்கு என்னால்
பதில் சொல்லமுடியாது என்று தோன்றியது.

மறுபடி அந்தப்பெரியவர்
வந்து கேட்டால் என்ன சொல்வது?
ஓடி ஒளிந்து கொள்வதைத்தவிர
வேறு வழியில்லை என்று தோன்றுகிறது!
 



கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்