புதுவை கடற்கரைக்கும்
எனக்கும் ஒரு
புதுமையான தொடர்பு ஒன்று உண்டு!
எப்போது போனாலும் அங்கே
ஏதாவது ஒரு "முதல்"
நடந்துகொண்டு தானிருக்கும்!
என் வாழ்க்கையின் உண்மைகள் இங்கே
அரங்கேறி இருக்கின்றன "முதல்"களாய்!
எட்டாவது படித்த சமயம்
அப்பாவிற்கு முதல்
இருதய நோய் தாக்குதல் வந்த பொது
முதன்முதலாய் இந்த பொது
மருத்துவமனைக்கு வந்தேன்...
என் முதல் சோகம்
இந்த கடற்கரைக்கு முன்னே அரங்கேறி இருக்கிறது...!
என் பதினெட்டாவது வயதில்
கூட்டத்தோடு கூட்டமாக
முதன்முதலாய் "அவளை" பார்த்தபிறகு
யதார்த்தமாய் இங்கே வந்து
அலைகளோடு பேசியபோது...
என் முதல் வாலிப மலரின் நடனம்
இந்த கடற்கரைக்கு முன்னே அரங்கேறி இருக்கிறது...!
என் இருபதாவது வயதில்
சகோதரிக்கு முதல் ஆண் குழந்தை
பிறந்தபோது...
என் முதல் பாசம்
இந்த கடற்கரைக்கு முன்னே அரங்கேறி இருக்கிறது...!
என் இருப்பதியோராவது வயதில்
பொறியியற்கல்லூரியில் இடம் கிடைத்தபின்
முதன்முதலாய் ரேமண்ட்சில் துணி எடுத்தபோது...
என் இரண்டாவது வாழ்க்கை
இந்த கடற்கரைக்கு முன்னே அரங்கேறி இருக்கிறது...!
இன்று இதோ இப்போது
முதன்முதலாய் வேலை கிடைத்து
இன்னும் இரண்டு நாளில்
இரயில் ஏறக்காத்திருக்கும்போதும்...
என் மூன்றாவது வாழ்க்கையும்
இந்த கடற்கரைக்கு முன்னே அரங்கேறி இருக்கிறது...!
இப்படியான என் எல்லா முதல்களும்
இங்கே அரங்கேறி இருந்தாலும்
எல்லாம் ரசமாய்த்தான்
முடிய' வேண்டும் என்று
ஏதாவது 'விதி' இறக்கிறதா என்ன...?!
---2003...தேதி நினைவில் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக