கண்ணபிரானுக்கு ஒரு கல்யாண பரிசு!
இன்னும் நன்றாய் எனக்கு நினைவிருக்கிறது... 2002 ல் ஒரு நாள். பம்மலில் என் சகோதரி வீட்டிற்கு வருகிறாய். நான்
பாலகுமாரனை படித்துகொண்டிருந்த சமயம். நீ ஒரு புத்தகம் கேட்கிறாய். உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று நான் தயங்குகிறேன். பிறகு ஏதோ ஒரு பாலகுமாரன் புத்தகம் கொடுக்கிறேன். அதுதான். அன்றிலிருந்து இன்று வரை எப்போது ஒருவரை ஒருவர் சந்தித்தலோ இல்லை கைபேசியில் பேசினாலோ நம் உரையாடல் வாழ்க்கை பற்றிய கேள்வியோ அல்லது அதை பற்றிய உண்மையான நிதர்சனமான யதார்த்தமான பதிவாகவே இருந்து வருகிறது.
அண்ணாசாலை வீதிகளில் புத்தகத்திற்காக அலைந்ததும் ரஷ்ய எழுத்துக்களை ஒன்று விடாமல் வாசித்ததும் அதில் செம்மணி வளையல் பற்றி நாம் பேசி சிரித்ததும்..எட்டு வருடங்களுக்குப்பிறகும் பசுமை நிறைந்து இருக்கின்றன அந்த நினைவுகள்.
புத்தகங்கள் வாசித்தது போய் அதையே விமர்சனம் செய்யும் அளவுக்கு உயர்ந்ததும்... அப்போது நான் எழுதி வந்த சிறுகதைகளும் எழுதி முடிக்காமல் விட்டுப்போன என் அப்பாவுடைய கதையும் அவைகளும் விமர்சனத்துக்கு ஆளானதும்..மறக்க முடியாத தருணங்கள் !
நான் இதைப்பற்றியே சிந்தித்திருக்க நீ திடீரென்று வேலை கிடைத்து போய் விட்டாய்... எனக்கு அப்போது கூட உரைக்கவில்லை வாழ்க்கை என்பது பேச மட்டுமல்ல..அதை பழகவும் வேண்டும் யோகா போல ' என்று ! அது உனக்கு கைவந்தது...அதற்கப்புறம் மிக நீண்ட பிரயத்தனத்திர்குப்பிறகு எனக்கு கண் வந்தது!
இந்தக்கால இடைவெளியில் உன்னிடம் கற்றுக்கொண்டது ஏராளம் . என் அண்ணனுக்குப்பிறகு உன்னிடம்தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
இங்கே ஒன்றை நான் பதிவு செய்ய வேண்டும். என் தகப்பனுக்கடுத்து தகப்பன் சாமியாய் இருந்தவன் என் அண்ணன். என் அண்ணனுக்கு அடுத்து சக உதிர னாய் எனக்குத்தோள் கொடுத்தது நீ ! அதை மறந்தால் குசேலன் கண்ணனை மறந்ததைப்போலாகாதா ?
நம் இருவரின் எண்ணங்கள் ஒன்று என்று நாம் எப்போதும் சொன்னதில்லை. கருத்துகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறோம். நீயோ அல்லது நானோ எதை பற்றி பேச ஆரம்பித்தாலும் நீண்டு கொண்டேயிருக்கும் சமுத்திரத்தின் அலையைப்போல. நமக்குத்தான் நேரம் இருப்பதில்லை.
பத்து நாளானாலும் பத்து வருடமானாலும் எப்போது சந்தித்தாலும் எங்கே விட்டோமோ அங்கிருந்தே தொடரும் நம் உரையாடல்!
எனக்கு எப்போதும் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. பாலகுமாரன் சொல்வதைப்போல நாமும் முன் ஜென்மத்தில் ஒரே குடும்பத்தில் பிறந்து வயல் வேலை செய்து பிழைப்பவர்களாய் கூரை வீட்டின் அருமை புரிந்தவர்களாய் பசியின் கொடுமை உணர்ந்தவர்களாய் ...இப்படி ஒரு எண்ணம் எப்போதும் உண்டெனக்கு . இது ஒரு மிகையாய் போய்விடக்கூடாது என்பதால்தான் நான் கவிதையாய் எழுதாமல் கடிதமாக எழுதுகிறேன்.
இப்போது என்ன இந்த கடிதத்திற்கு அவசரம் என்று நீ கேட்கலாம். இப்போது கூட இந்த கடிதம் எழுதப்படவில்லை என்றால் அதன்பிறகு இந்த கடிதத்திற்கு எப்போதும் அவசியம் இல்லாமற் போய்விடும். அதற்காகத்தான்.
கடிதமே எழுதாத ஒரு காலமாக இது இருந்தாலும் உனக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதி அது இன்னும் முற்றுபெறாமல் பல வருடங்களாக என் கவிதைகளைப்போல அதுவும் காத்துக்கிடக்கிறது என் பரணில்.
நீ வனவாசம் படித்திருக்கிறாயா என்பது எனக்கு நினைவில்லை. அதில் கண்ணதாசன் கலைஞரை சந்திப்பதற்கு முன் அவரைப்பற்றி சில வார்த்தைகள் எழுதிஇருப்பார். அதைப்போலத்தான் நானும் இப்போது இருக்கிறேன்.
உனக்கு திருமணம் . ஆனால் என்னால் வர முடியாத சூழல். குடும்பத்தோடு வர வேண்டும் என்பது எனது விருப்பமாய் இருந்தது. உனக்குத்தான் தெரியுமே, நான் எது நினைத்தாலும் அதற்கு எதிர்ப்பதமாகத்தான் நடக்குமென்று.
இப்போது கூட ஒரு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தால் நான் இருந்தென்ன பயன்? அதுவும் தவிர இந்தக்கடிதமெல்லாம் Dostoevsky ; Tolstoy - இன் கடிதங்களைப்போல் புகழ் பெற முடியாவிட்டாலும் பின்னாளில் அதியமானுக்கோ அல்லது உன் குழந்தைகளுக்கோ உபயோகமாய் அல்லது பொழுது போக்காய் இருக்குமல்லவா?
தொடரும்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக