இப்போது உன்னை சந்தித்தால்?
கொஞ்சம் கூச்சமாய்
இருக்கும் எப்போதும் போல!
எந்த வித உணர்ச்சியும்
இருக்காது உன் கணவனை
பார்க்கும்போது!
சிறிதேனும் அன்பு ஊறவேண்டுமே
உன் குழந்தைகளை நோக்கும்போது?
கொஞ்சம் பணக்காரத்திமிர்
வந்து விட்டதோ என
உள்ளூர மனம் கருவிக்கொண்டிருக்கும்!
எந்த வித பட்டாம்பூச்சியும்
பறப்பதில்லை மனதில்!
நீ காரில் வந்தது கடுப்பாய் இருக்கும்
நான் நடந்து வரும்போது!
எந்தவித குற்ற உணர்ச்சியுமே
இல்லாமல் எல்லோரிடமும்
இயல்பாய் இருப்பாய் நீ!
என் மனமோ சிரிப்பாய்
சிரித்துக்கொண்டிருக்கும்
வெட்கமே இல்லாமல்!
அப்போதும் யாரிடமோ ஏதாவது
என்னைப்பற்றி குறை
சொல்லிவிட்டுபோவாய் நீ!
வழக்கம்போல யாராவது ஏதாவது
கேட்டால் அசிங்கமே இல்லாமல்
சிரித்து மழுப்பி விட்டுப்போவேன் நான்!
என் கல்யாணத்திற்கு வந்துவிட்டு
என்னை யாரென்றே தெரியாதது
மாதிரி இருந்தாயே - அதை இப்போதும்
நினைத்து ஆத்திரப்படுவேன்!
எப்போதும் போல உன்னை
மறைந்திருந்து ரசித்துக்கொண்டிருப்பேன்
அப்போதும் - 'இது என்ன திருட்டுத்தனம்'
என்று என் தலையை
நானே தட்டிக்கொள்வேன்!
இப்போதும் உன்னிடம் பேச
வார்த்தையே கிடைக்காது எனக்கு!
எப்போது பேசியிருக்கிறேன் -உன்னிடம்
இப்போது பேசுவதற்கு!
உனக்கு பிடித்த அரக்கு நிறத்தில்
புடவை உடுத்தி இருப்பாய் - அந்த
நிறம் உனக்கு எடுப்பாய் இருக்கும்
என்றாலும் இப்போதெல்லாம்
எனக்கு எரிச்சல் வருகிறது!
அடிக்கடி நீ ஆங்கிலத்தில்
யாருடனோ பேசும்போது
கெட்ட வார்த்தையாய்
விழுந்து தொலைக்கிறது என் காதில்!
இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கு நடுவிலும்
நான் தான் உன்னைக்காதலித்தேன்
என்று சொல்லக்கூட நா எழாது எனக்கு!
ஏனோ அடுத்த முறை
உன்னை எங்கேயும் எப்போதும்
சந்தித்து விடவே கூடாது என
என் கண்ணனை வேண்டிக்கொள்வேன் நான்!
இப்போதெல்லாம் உன்னைப்பார்க்கும்போது
என் மனைவியின்
முகம்தான் தெரிகிறதெனக்கு!
அது என்னவோ தெரியவில்லை -
காதலிக்கு கல்யாணம் ஆன மறுகணமே
மனைவியிடம் தீராத காதல்
கொண்டு விடுகிறது மனம்!
கொஞ்சம் கூச்சமாய்
இருக்கும் எப்போதும் போல!
எந்த வித உணர்ச்சியும்
இருக்காது உன் கணவனை
பார்க்கும்போது!
சிறிதேனும் அன்பு ஊறவேண்டுமே
உன் குழந்தைகளை நோக்கும்போது?
கொஞ்சம் பணக்காரத்திமிர்
வந்து விட்டதோ என
உள்ளூர மனம் கருவிக்கொண்டிருக்கும்!
எந்த வித பட்டாம்பூச்சியும்
பறப்பதில்லை மனதில்!
நீ காரில் வந்தது கடுப்பாய் இருக்கும்
நான் நடந்து வரும்போது!
எந்தவித குற்ற உணர்ச்சியுமே
இல்லாமல் எல்லோரிடமும்
இயல்பாய் இருப்பாய் நீ!
என் மனமோ சிரிப்பாய்
சிரித்துக்கொண்டிருக்கும்
வெட்கமே இல்லாமல்!
அப்போதும் யாரிடமோ ஏதாவது
என்னைப்பற்றி குறை
சொல்லிவிட்டுபோவாய் நீ!
வழக்கம்போல யாராவது ஏதாவது
கேட்டால் அசிங்கமே இல்லாமல்
சிரித்து மழுப்பி விட்டுப்போவேன் நான்!
என் கல்யாணத்திற்கு வந்துவிட்டு
என்னை யாரென்றே தெரியாதது
மாதிரி இருந்தாயே - அதை இப்போதும்
நினைத்து ஆத்திரப்படுவேன்!
எப்போதும் போல உன்னை
மறைந்திருந்து ரசித்துக்கொண்டிருப்பேன்
அப்போதும் - 'இது என்ன திருட்டுத்தனம்'
என்று என் தலையை
நானே தட்டிக்கொள்வேன்!
இப்போதும் உன்னிடம் பேச
வார்த்தையே கிடைக்காது எனக்கு!
எப்போது பேசியிருக்கிறேன் -உன்னிடம்
இப்போது பேசுவதற்கு!
உனக்கு பிடித்த அரக்கு நிறத்தில்
புடவை உடுத்தி இருப்பாய் - அந்த
நிறம் உனக்கு எடுப்பாய் இருக்கும்
என்றாலும் இப்போதெல்லாம்
எனக்கு எரிச்சல் வருகிறது!
அடிக்கடி நீ ஆங்கிலத்தில்
யாருடனோ பேசும்போது
கெட்ட வார்த்தையாய்
விழுந்து தொலைக்கிறது என் காதில்!
இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கு நடுவிலும்
நான் தான் உன்னைக்காதலித்தேன்
என்று சொல்லக்கூட நா எழாது எனக்கு!
ஏனோ அடுத்த முறை
உன்னை எங்கேயும் எப்போதும்
சந்தித்து விடவே கூடாது என
என் கண்ணனை வேண்டிக்கொள்வேன் நான்!
இப்போதெல்லாம் உன்னைப்பார்க்கும்போது
என் மனைவியின்
முகம்தான் தெரிகிறதெனக்கு!
அது என்னவோ தெரியவில்லை -
காதலிக்கு கல்யாணம் ஆன மறுகணமே
மனைவியிடம் தீராத காதல்
கொண்டு விடுகிறது மனம்!
2 கருத்துகள்:
last line was too good..!!!
Excellent! Brings out the intended emotions.
கருத்துரையிடுக