நிறைந்து வழியும்
என் காதல்...
காணாத காட்டில்
ஓடையாய் நடக்கிறது!
எப்போது நடக்கும்
உன் முகம் காண்பது?
ஏனோ...
என் கனவில் மட்டுமே
வருகிராய் நீ..
நீ மட்டுமே...
மழை வடிந்த அழகாய்..
இலை சொட்டும் துளியாய்...
நீ என் வாழ்க்கைக்கு ஊற்றிக்கொண்டே இருக்கிறாய்...
...என் வாழ்க்கையாய்
சுறந்து கொன்டே இருக்கிறாய்...
உன் கனவுகளின்
வண்ண்ம் தொட்டே
என் வாழ்க்கை சுவர்களுக்கு
உட்பூசுகிறேன்
என் வீட்டின் முற்ற்ம் கூட
உன் இடை தொடும்
சுடிதார் நிறம்.
என் கருவிழி கூட
உந்தன் கூந்தல் நிறம்..
என் பொய்களில் கூட
உன் புன்னகை சாயல்...
அவ்வப்போதோ...
இல்லை எப்போதுமோ...
உன்னைப் போலவே
நடந்து பார்கிறேன்...
உன் கனவுகள் சுமந்தே...
கால் தடம் பற்றியே...
சாலை கடக்கிறேன்...
நான்..
என்னை
நீ
என்றே
விளிக்கிறேன்...
உனக்கான
எனது
காத்திருப்பு...
என் தவம்.
ஆயினும்
எப்போது நடக்கும்...
மீண்டும்
உன் முகம் காண்பது...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக