சனி, ஆகஸ்ட் 14, 2010

ஆயுத பாணி

உன் அம்பறாத்தூணியில்  இன்னும்
சில பாணங்கள்  மிச்சமிருக்கின்றன!

எப்போதும் நீதான் ஆயுதம்
தாங்கி நிற்கிறாய்!
வழக்கம்போல நான் நிராயுத பாணியாய் 
தனித்து  நிற்கிறேன்!

 உன் வியூகம் எனக்கு புரிவதே  இல்லை!

எப்போது வருகிறாய்
எப்போது எறிகிறாய்
எதுவும் என்னால்
கணிக்க முடியவில்லை!

எங்கிருந்தாலும் வருகிறாய்
எங்கிருந்தாவது எறிகிறாய்
இதயம் பற்றி எரிகிறது
விட்டு விடு
என்னால் முடியவில்லை!

சக்கர வியூகம்  என்றால்
கொஞ்சம் தள்ளி நிற்கலாம்!
சர்க்கரை  வியூகம் என்றால்
கொஞ்சம் கட்டி நிற்கலாம்!

இது இரண்டும் கலந்த
அக்கறை  வியூகம் என்றால்?
கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்!

என் மீது உனக்கேன் அக்கறை?

ஆசை இருந்தால்
ஆயுதம் ஏந்த தோன்றுமா?
நேசம் இருந்தால்
நெஞ்சை பிளக்கத்தொன்றுமா?

எல்லாம் என் மீது இருப்பதால்தான்
ஏதாவது என்னை செய்யத்தோன்றுகிறதா?

இதோ நிற்கிறேன் அசையாமல்
உன் எல்லாவித அம்புகளையும்
எய்துவிட்டுப்போ!

உனக்காக அடுத்த பிறவியிலும்
இதே பொம்மையாய் வந்து நிற்கிறேன்!

அதற்காக இருக்கட்டும் -
உன் அம்பறாத்தூணியில் இன்னும்
சில பாணங்கள் மிச்சமிருக்கட்டும்!

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்