செவ்வாய், அக்டோபர் 04, 2011

கொலைகாரி!

உன்னோடு தொடர்புடைய  அனைத்தும்
தினமும் ஏதாவது ஒரு
சர்ச்சையை உண்டாக்கிக்கொன்டே இருக்கின்றன!   - 


 நீ  மார்போடு அணைத்துக்கொள்ளும் உன்
புத்தகம் கூட சமயங்களில் பொய் சொல்கிறது! - 

நீ இதயமில்லாதவள் என !
நீ கண்ணியமில்லாதவள்  என ! 
நீ கருணை இல்லாதவள் என!

நீ அணியும் காலணியும் சில நேரங்களில் 
உனக்கு கல்லணை  கட்டி பொய்
கட்டியம் கூறுகிறது! -
நீ நடை சரி இல்லாதவள் என!
நீ ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை என!

நீ வாரியணைத்து ஆசையாய் 
கொஞ்சும் அடுத்தவீட்டுக்குழந்தையும் 
கன்னம் குழி விழ உன்னை கேலி செய்கிறது! - 

நீ ஒரு பைத்தியம் என!
நீ ஒரு கிறுக்கி என!

உன் பிம்பத்தைக்காட்டும் ஆளுயர கண்ணாடியும் 
உன்னைப்பற்றிஒரு முழு நீள கேலிச்சித்திரத்தை
வரைந்து விட்டுப்போகிறது! - 
 
நீ இந்தப்பிரபஞ்ச  பேரழகி என!
நீ ஒரு வேடதாரி என!
காலையில் கண் விழித்து 
இந்த உலகத்தை நீ பார்க்கும் போது - அந்தக்காலமும்
சில நேரம் உன்னை சந்தேகத்தோடு பார்க்கிறது ! -

நீ ஒரு கலகக்காரி என!
நீ ஒரு கோபக்காரி என!

ஆனால் -
மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் 
உன்னைப்பற்றி என் ஆத்மா சொல்லும் - நீ 
இரக்கமே இல்லாத ஒரு கொலைகாரி என!


 








 

 

கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்