கண்ணபிரானுக்கு ஒரு கல்யாணப்பரிசு - 2
சகுந்தலா தேவி புத்தகத்தை எப்படி (இன்னொரு author எனக்கு நினைவில் இல்லை) வாசிக்க வேண்டும், aptitude எப்படி தயார் செய்ய வேண்டும்" இன்றும் நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது எனக்கு. கிளிப்பிள்ளையைப்போல் சொல்லிக்கொடுத்தாய். அந்த exam மோடு சரி ..அதற்குப்பிறகு சொல்லிக்கொடுக்க நீயுமில்லை உனக்கு நேரமுமில்லை.
அந்த நிறுவனத்தில் நம்மையெல்லாம் எப்படி எடுப்பார்கள் என்றே இத்தனை வருடம் நான் நினைத்திருந்தேன்...அப்போதும் நீ சொல்வாய்: நம்மை விட கேவலமானவர்கள் எல்லாம் அங்கே வேலை செய்கிறார்கள் என்று. நான் அதை அப்போது நம்பவில்லை.
காட்சிகள் மாறியது. பயணங்கள் மாறின. நீ வேறு திசை நான் வேறு திசை. நீ பெங்களூரில் வேலை கிடைத்து அங்கே வந்தாய். நான் அப்போது அங்கே இன்னும் வேலை தேடிக்கொண்டிருந்தேன். உன் மாத சம்பளத்தில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் எனக்குக்கொடுத்துவிட்டுபோனாய்.
நீ வாங்கிய சம்பளமே பத்தாயிரத்திற்கும் குறைவுதான் என்று எனக்கு நன்றாகத்தெரியும். இருந்தும் வேண்டாம் என்று சொல்ல எனக்கு மனமில்லை. பசி ஆறுவதற்கு பணம் வேண்டும் அது தவிர அண்ணனிடம் அடிக்கடி பணம் கேட்பதில் இருந்த சிக்கல் நீ நன்கு அறிந்ததே. நிறைய நேரம் நாம் நினைத்ததுண்டு. ஏன் நாம் இப்படி இருக்கிறோம் அடுத்தவர்களிடம் கூசாமல் பணம் வாங்குகிறோமே என்று என்னை நானே திட்டித்தீர்த்துக்கொள்வேன். எனினும் ஒரு சின்ன ஆறுதல். நான் வேறு யாரிடம் வாங்குகிறேன், உன்னிடமோ அல்லது ஜனாவிடமோ தானே...!
அதற்கு அசிங்கப்படுவதே இல்லை. நீங்கள் இருவரும் அசிங்கப்பட வைத்ததுமில்லை.
அந்த காலங்களும் அங்கு நீடிக்கவில்லை. நான் மறுபடி சென்னை வந்தேன்.
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து டெல்லி சென்றேன். பிறகு நீண்ட நாட்கள் கழித்து மறுபடி நான் பெங்களூருக்கே வந்தேன்.
அப்போது அதீத உற்சாகத்தோடு இருந்தேன் அது மிகப்பெரிய நிறுவனம் என்பதைவிட
உன்னுடன் செல்வழிக்கப்போகும் நாட்களுக்காகத்தான் நான் ஏங்கிகிடந்தேன்.
அங்கும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் .
இப்போது பேச்சு பாலகுமாரனில் இல்லை படித்ததில் பிடித்தது என்றில்லை சினிமா இல்லை ...இது வேறு வாழ்க்கை. வேறு களம் என்பதை நாம் இருவருமே உணர்ந்திருந்தோம்.
நாமே கருத்துக்களை உருவாக்கப்பழகி விட்டோம். வாழ்க்கையில் எல்லாமே தெரிந்தது போலிருந்தது. பிரச்சனிகள் வரும் போது
எதுவும் தெரியாதது போல் இருந்தது. உலகத்திற்கு நாமே தீர்வு சொன்னோம். வாழ்க்கையை அது போகும் போக்கிலேயே வாழக்கற்றுக்கொண்டோம்.
என் வேலையில் உன் வேலையில் நிறைய மாற்றங்கள். வளர்ந்தாய். நானும் வளர்ந்தேன்.
தினமும் சந்தித்தது போய் எப்போதாவது சந்தித்தோம். எந்த மாற்றம் வரினும் நம் உள்ளங்கள்
மட்டும் மாறவே இல்லை. அது மாறாது . அது அப்படி பழக்கப்பட்டு இருந்தது அல்லது அது அப்படித்தான்!
கடைசியாய் அங்கிருந்து சென்னை வந்தேன். எந்த நிறுவனத்தில் நம்மை சேர்த்துக்கொள்வார்களோ மாட்டார்களோ என்று நினைத்தேனோ அதே நிறுவனத்தில் வந்து சேர்ந்தேன் ..பிறகு அந்த நிருவனந்த்தை நானே விலக்கிவிட்டு வேறு வேளையில் சேர்ந்தேன்.
இப்போதும் நாம் அடிக்கடி பேசிக்கொள்வதில்லை. இருந்தாலும் நமக்குத்தெரியாமலே
நம் உள்ளங்கள் பேசிக்கொள்கின்றன.
உன் திருமணத்திற்கு வரமுடியாமல் போனதை நினைத்து மிகப்பெரிய வருத்தம்.
இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நீயும் பழகி இருக்கிறாய் நானும் பழகி இருக்கிறேன்.
இந்த கடிதத்தில் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. விட்டுப்போனதை வேறொரு சந்தர்ப்பத்தில்
முழுமையாய் எழுதுவேன்.
விரைவில் சிந்திப்போம் (அ) சந்திப்போம் ...விரைவில் நீயும் நல்ல செய்தி சொல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக