வியாழன், ஜூலை 29, 2010

ஆசைத்தீ!


இதைப்பற்றித்தான் எழுத வேண்டும்
என்று நினைக்கும்போதே - அதைப்பற்றிய
நினைவுகள் தேடிப்பிடித்தாலும்
கிடைப்பதில்லை!

இந்த வேலைதான் நான் தேடிக்கொண்டிருந்தது
என்று நினைக்கும்போதே - 'அதற்கு நீ
தேர்வாகவில்லை' என்று ஒரு மின்னஞ்சல்
எங்கிருந்தாலும் ஓடிவரும்!

இந்தக்கரும்பச்சை நிற சட்டைதான் பிடித்தது
என்று தொடும்போதே - 'அது மாதிரிக்கு மட்டும்தான்'
என்றபதில் மனதை என்னவோ செய்யும்!

இதை திரை அரங்கில்தான் பார்க்க வேண்டும்
என்று போனால் அரங்கு நிறைந்த காட்சிகளாக
ஓடிக்கொண்டிருக்கும் !

இந்தப்பெண் துணையாய் வந்தால் நன்றாக
இருக்கும் என்று என்னும்போதே
கழுத்தில் மஞ்சளாய் ஒரு பாம்பு நெளியும்!

இந்தப்பெண்னாவது அமைய வேண்டும்
என்று நினைத்தால் 'ஜாதகம் சரியில்லை'
என்று பாதியில் எழுந்து போவார்கள்!

சரி இதற்கு அடுத்த பென்னாவது முடிய
வேண்டும் என்றால் 'உனக்கு வேலை வரட்டும்
பார்க்கலாம்' என்பார்கள் !

காதலித்து பார்க்கலாம் என்றால் அதற்கு
உண்டான எந்த தகுதியும் என்னிடம்
இருப்பதாய் எந்தப்பெண்ணும் சொல்லவில்லை!

இருந்தாலும் முயற்சிக்கலாம் என்றால் அது
நான் மட்டுமே பயணம் செய்யும் ஒற்றை
வழி பாதையாய் மரண வலி கொடுத்தது!

கல்யாணமானால் மகிழ்ச்சி என்னைக்கட்டிகொள்ளும்
என்று நினைத்த போது நாய் வால் கதை
என் கண்ணை மறைத்தது!

நண்பனின் திருமணத்திற்கு குடும்பத்தோடு
சென்று வரவேண்டும் என்று நினைத்த போதே
அடுத்த ஊருக்கு வேலை போயிற்று !

இப்படி என் எந்த நியாயமான ஆசைகளும்
நிறைவேறாமற் போனாலும் - இன்னும் மனதில்
ஆசைத்தீ எரிந்து (எழுந்து) கொண்டே தான் இருக்கிறது - அடுத்தடுத்த
நினைவுகளுக்காக!

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

great job done - Srini... romba nalla irundudhu.. but ungalukku training ku nadula eppadi time kedachuthu ethellam ezhudha??? ;-0

Unknown சொன்னது…

enna srini? unakkulla irukira balakumaran marupadiyum kilambittar pola??mm..its very nice..

Srinivasan சொன்னது…

Thanks!

Ashokkumar சொன்னது…

ரொம்ப நாள் ஆச்சு
கலகிட்ட மச்சான்

janar சொன்னது…

wanted to leave my critique.. but looks like you are assuming (or creating) some following, so... I 'll retract, for now :)

Dr.Padmanath சொன்னது…

Kavithai miga arumai...
athaivida athil irukkum unmai...
urraikirathu...
keep writing.
padmanath

வலைப்பதிவு காப்பகம்