யாருக்குத்தெரியும் - நாளை
எப்படி இருக்கும் என்று
யாருக்குத்தெரியும்?
தெரிந்தால் சொல்லி அனுப்புங்கள்
ஒரு வேளை நீங்கள் கடவுளாக இருக்கலாம்
அல்லது கடவுளாக மாறலாம் - யாருக்குத்தெரியும்?
நாளை எப்படி இருக்கும் என்று யாருக்குத்தெரியும்?
எல்லோருக்கும் வாரத்தில் ஏழு நாட்கள்
எனக்கு மட்டும் ஆறு நாட்கள் -
ஒரு நாள் அப்பா மாதிரி
ஒரு நாள் அம்மா மாதிரி
ஒரு நாள் அண்ணன் மாதிரி
ஒரு நாள் அக்கா மாதிரி
ஒரு நாள் என் மனைவி மாதிரி
கடைசி கடைசி நாள் என் நண்பன் மாதிரி
இதெல்லாம் எப்படி என்று யாருக்குத்தெரியும்?
தெரிந்தால் சொல்லி அனுப்புங்கள்
ஒரு வேளை நீங்கள் கடவுளாகவே இருக்கலாம்
அல்லது கடவுளாகவே மாறலாம்
யாருக்குத்தெரியும் - அந்த ஒரு நாள்
எப்படி இருக்கும் என்று யாருக்குத்தெரியும்?
ஒரு வேளை அவளிடம் இருக்குமோ -
அவளைக்கண்ட பிறகுதான் கடவுளா? - இல்லை
கடவுளைக்கண்ட பிறகுதான் அவளா?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லி அனுப்புங்கள்
ஒருவேளை நீங்கள் அவளைக்கண்ட
கடவுளாக இருக்கலாம் !
யாரைக்கேட்பது - அவளிடமா?
அவளைக்கண்டால் ஏதாவது
கேட்கத்தான் தோன்றுமா?
யாருக்குத்தெரியும் - நாளை
எப்படி இருக்கும் என்று
யாருக்குத்தெரியும்?
தெரிந்தால் சொல்கிறேன் -ஒருவேளை நான் கூட
கடவுளாக இருக்கலாம் -அல்லது அவளைக்கண்ட
கடவுளாக மாறலாம்!
யாருக்குத்தெரியும்?
------27thDEC2003
எப்படி இருக்கும் என்று
யாருக்குத்தெரியும்?
தெரிந்தால் சொல்லி அனுப்புங்கள்
ஒரு வேளை நீங்கள் கடவுளாக இருக்கலாம்
அல்லது கடவுளாக மாறலாம் - யாருக்குத்தெரியும்?
நாளை எப்படி இருக்கும் என்று யாருக்குத்தெரியும்?
எல்லோருக்கும் வாரத்தில் ஏழு நாட்கள்
எனக்கு மட்டும் ஆறு நாட்கள் -
ஒரு நாள் அப்பா மாதிரி
ஒரு நாள் அம்மா மாதிரி
ஒரு நாள் அண்ணன் மாதிரி
ஒரு நாள் அக்கா மாதிரி
ஒரு நாள் என் மனைவி மாதிரி
கடைசி கடைசி நாள் என் நண்பன் மாதிரி
இதெல்லாம் எப்படி என்று யாருக்குத்தெரியும்?
தெரிந்தால் சொல்லி அனுப்புங்கள்
ஒரு வேளை நீங்கள் கடவுளாகவே இருக்கலாம்
அல்லது கடவுளாகவே மாறலாம்
யாருக்குத்தெரியும் - அந்த ஒரு நாள்
எப்படி இருக்கும் என்று யாருக்குத்தெரியும்?
ஒரு வேளை அவளிடம் இருக்குமோ -
அவளைக்கண்ட பிறகுதான் கடவுளா? - இல்லை
கடவுளைக்கண்ட பிறகுதான் அவளா?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லி அனுப்புங்கள்
ஒருவேளை நீங்கள் அவளைக்கண்ட
கடவுளாக இருக்கலாம் !
யாரைக்கேட்பது - அவளிடமா?
அவளைக்கண்டால் ஏதாவது
கேட்கத்தான் தோன்றுமா?
யாருக்குத்தெரியும் - நாளை
எப்படி இருக்கும் என்று
யாருக்குத்தெரியும்?
தெரிந்தால் சொல்கிறேன் -ஒருவேளை நான் கூட
கடவுளாக இருக்கலாம் -அல்லது அவளைக்கண்ட
கடவுளாக மாறலாம்!
யாருக்குத்தெரியும்?
------27thDEC2003
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக